"உலகை வழிநடாத்த – அன்பால் போஷியுங்கள்"
என்பதனை முன்னெடுத்து, எமது பாடசாலையில் சிறுவர் தினம் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடன், மாணவர்களின் பங்குபற்றுதலோடு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இன்றைய நாளின் அனைத்து நிகழ்வுகளும் பாடசாலை ஆசிரியர்களினால் மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிந்ததன.
அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அன்பான வரவேற்புடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியர்களினால் badge அணிவிக்கப்பட்டு, இனிப்புப் பண்டங்கள் வழங்கப்பட்டன.
இது சிறுவர்களின் முகத்தில் பிரகாசமான புன்னகையை மலரச் செய்தது.
மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய மேடை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.
ஆரம்பப் பிரிவு மாணவர்கள் தங்கள் வயதுக்கு ஏற்ற விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
பெண் மாணவிகள் மற்றும் தரம் 6 தொடக்கம் 9 ஆண் மாணவர்கள் சுவாரஸ்யமான பல விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
தரம் 10 தொடக்கம் 13 வரையான ஆண் மாணவர்கள் அனைவரும் உள்ளக விளையாட்டரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிகழ்வுகள்,
1. ஐஸ்கிறீம் மற்றும் Chocolate என்பவற்றுக்கான பூரண அணுசரணை பழைய மாணவர் சங்கத்தினாலும்
2. கிரிக்கெட் போட்டிகளுக்கான பூரண அனுசரணை பாணகமுவ விளையாட்டுக் கழகத்தினாலும் (PSC)
3. ஏனையவை ஆசிரியர்களின் பூரண அணுசரணையுடனும்
திட்டமிட்டு நடாத்தப்பட்டன.
மேலும், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் PSC உறுப்பினர்களின் பங்கேற்பு இன்றைய நிகழ்வை சிறப்பாக்கின.
இந்நிகழ்வின் மூலம் மாணவர்கள் ஒற்றுமை, நட்பு, விளையாட்டு நெறிமுறைகள், கலை மற்றும் பண்பாடு ஆகியவற்றின் மதிப்பை அனுபவித்துக் கற்றனர்.
சிறுவர் தினம் என்பது வெறும் கொண்டாட்டமல்ல, அது மாணவர்களின் கனவுகளை பேணும் நாள். எங்கள் சிறுவர்கள் தான் எதிர்கால தலைவர்கள், அவர்கள் அன்பாலும் அறிவாலும் உலகை வழிநடத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்நாள் நிறைவடைந்தது.