அதிபர் செய்தி
ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
இன்றைய உலகில் கல்வி உட்பட அனைத்து துறைகளும் நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பம் என்பது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திலேயே முழுமையாக தங்கியுள்ளது. கல்வி துறையில் துரிதமான தீர்மானங்களை எடுப்பதற்கு தரவுகளை நேராக பகுப்பாய்வுக்கு உட்படுத்தி நேர்த்தியான தகவல்களை பெற வேண்டியுள்ளது. எனவே இங்கு மிகச் சீரான தரவுத்தளம் அத்தியாவசியமாக தேவைப்படுகின்றது. கல்வித் துறை அபிவிருத்தி சார்ந்த முடிவுகளை மேற்கொள்வதற்கு தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்து தீர்மானங்களுக்கு வர வேண்டியுள்ளது. அந்நூர் தேசிய பாடசாலை ஆனது மிக நீண்ட காலமாக தரவுத்தள பயன்பாட்டின் ஊடாக மாணவர்களின் கல்வித் துறை வளர்ச்சியில் பாரிய ஒரு பங்களிப்பைச் செய்து வருகின்றது. பொதுவாக பாடசாலையின் கல்வி சார்ந்த அடைப்புகளையும் அதே போன்று இணைப்பாட விதானம் சார்ந்த அடைவுகளை யும் அன்றாட நிகழ்வுகளையும் பாடசாலை சமூகத்திற்கும் அதற்கு வெளியேயும் கொண்டு செல்வதற்கு தரவுத்தளம் பாரிய பங்களிப்பைச் செய்கின்றது. ஒரு பாடசாலையின் பெயர் புகழ் நன்மதிப்பு போன்றவை குறித்த தரவுத்தளத்தின் பயன் காரணமாக மேலும் மெருகூட்டப்படுகின்றது என்றால் அது மிகை கூற்றாண்று. உலகின் நாலா புறமும் சிதறிவாழும் பாடசாலையின் பழைய மாணவர்களையும் பாடசாலைச் சமூகத்தையும் பாடசாலையுடன் இணைக்கும் பாலமாக தரவுத்தளம் காணப்படுகின்றது. இதனூடாக பாடசாலை சமூகத்தை தொடர்ந்தும் பாடசாலையுடன் கைகோர்த்து ஒத்துழைக்கும் ஊடகமாக தரவுத்தளம் காணப்படுகிறது. எனவே தொடர்ந்தும் நாம் இவ்விடயத்தில் சீராக செயலாற்றுவோம் பாடசாலை தரவுத்தளமானது பாடசாலையை மேலும் முன்னேற்றுவதற்கு ஒரு துணையாக அமையும்.
ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
அதிபர்
அந்-நூர் தேசிய பாடசாலை பாணகமுவ.









