பாடசாலை கீதம்
இறைவா உன்னைப் புகழ்கின்றோம்
இளையோர் எங்கள்
பிழைபொறுத்தருள்வாய்
என உன்னை வேண்டுகின்றோம்//
அந்நூர் எங்கள் கல்லூரியினை
வளம் பெறச் செய்வாயே !
வள்ளல் நபியின் வாழ்வில் நடக்க
கருணை புரிவாயே ! //
தினம் தினம் உன்னை புகழ்வற்கு
அருளைத் தருவாயே!
உன்னிடம் உள்ள உயர்தரமான
அறிவை ஈவாயே ! //
(இறைவா //)









