அந்-நூர் மத்திய கல்லூரி

அந்-நூர் மத்திய கல்லூரி

வரலாறு

இரண்டாம் தவணைப்  பரீட்சை

538858338_1326437769492255_446312911305671820_n.jpg
556817060_122154919766698475_2063929658085936685_n.jpg
557498598_122154919718698475_4939978370129010831_n.jpg
556967957_122154919682698475_5866803838492832945_n.jpg
556217970_122154920054698475_3741888513895825675_n.jpg

நாலா புறமும் மலைகளை இயற்கை அறண்களாக்கி , மருத நிலங்களும், அவற்றுக்கு வளம் சேர்க்கும் "தெதுறு ஓயா"  அருவியும் ஊடறுத்துப்  பாயும் இயற்கையன்னையின் மாபெரும் கொடையே "பாணகமுக (மாந்திராவ)" எனும் எங்கள் கிராமம். இம் மண்ணின் ,கண்ணின் கருவாய்த் திகழும் கல்வியின் தாயகமே அன்நூர் மத்திய கல்லூரி.
 1946 .12 03 ம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலை இன்று 76 வருட வரலாற்றை கொண்டுள்ளது. 
எம் கல்லூரி வெற்றிப் பாதையின் வரலாற்று பின்னணியை சற்றுப் புரட்டிப்பார்த்தால் இம்மண்ணிலே கல்வி, விருட்சமாய் வேரூன்ற பாணகமுவ முஸ்லிம் வாலிப சங்கங்கள் ஒன்றிணைந்து முன்வந்தன. தற்காலிகமான ஓர் ஓலைக்கட்டடத்தோடு ஆரம்பிக்கப்பட்ட எம் அறிவகத்தின் முதல் ஆணிவேராய்த் திகழ்ந்த அதிபர் K. கந்தப்பு அவர்களோடு மூன்று ஆசிரியர்களும் அணிதிரண்டு அறிவின் வாசத்தினை மெல்ல கமழச் செய்தனர். இக் 
கல்லூரியின் முதல் மாணவனாக மர்ஹும்  A.R. பீர் முஹம்மத் அவர்களும், முதல் மாணவியாய் மர்ஹுமா I.L.  அஸ்மா பீபீ அவர்களும் அறிவுச் சுடரினை ஏற்ற வந்த முதல் இரு முத்துக்களாவர். இவ்வாறு 89 மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்ட எம் கலையகம் அறிவின் ஒளியாய் அறிவின் ஒளியை நோக்கி மெல்ல நகரலாயிற்று. இக்கலையகத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த  S.P. கிருஷ்ணபிள்ளை மற்றும் அதனைத் தொடர்ந்து ஜனாப் H.M பஷீர் ,ஜனாப் N.A. ரஷீத்,
 ஜனாப் M.I.M.ஹசன், ஜனாப்  Y.L.M. ரபீக், ஜனாப் Y.L.M. ஸவாஹிர், ஜனாப் S.M.  தாஜுதீன், ஜனாப் ஜலால்தீன் , ஜனாப் M.I.M . ஆரித், ஜனாப் மர்சூக் , ஜனாப் K.M. காலிதீன் ,ஜனாப் M.I.M.  தாஜுதீன் ,ஜனாப் A.C.S. அஹமட், ஜனாப் M.I.M.  ஹனிபா ,ஜனாப் A.H.M. பாரூக் , ஜனாப் M.L.A. ஸமட், ஜனாப் S.A. ஸ்லாம், ஜனாப் M.H.M. புரூஸ்,  ஜனாப் S.A. ஸ்லாம்,  ஜனாப் A.C.M. முஸ்தபா , ஜனாப் M.H.M.  நெளஷாட், ஜனாப் M.J.M. ஸமூன்,ஜனாப் N.S.M.  காசிம், ஜனாப் J.L. மெச்சிக், ஜனாப்  M.R.M. ரிஸ்வான் ஆகிய அதிபர்களின் தலைமையில் எமது பாடசாலை பல வெற்றிகளை அடைந்தன. 
 மேலும் எம் கல்லூரியின் பயண பாதையில் 1947 ஆம் ஆண்டு காலப்பகுதியில் SSC   பரீட்சைக்குத் தோற்றிய எட்டு மாணவர்களில் செய்யது அகமட்  எனும் மாணவன் சிறந்த முறையில் சித்தி எய்தியெய்தியமையும் போற்றத்தக்க விடயமாகும்.
 மேலும் 1952 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஓலைக் கட்டடமானது, நிரந்தர கட்டிடமாக "உஸாமா " எனும் நாமங் கொண்டு மாற்றமுற்றது. அதனை அடுத்து 1958 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மூன்று மாணவர்களுள் ஒருவர் சித்தியெய்தியமையும்  எம் கல்லூரியின் கல்வி வளர்ச்சியை மெருகூட்டிய மற்றுமோர் சான்றாகும். அத்துடன் 1964ஆம் ஆண்டு  5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் S.A.S.  பௌஜத்துமா எனும் மாணவியின் சித்தியோடு கல்விப் பயணப் பாதையில் இன்னொரு எட்டு முன்னோக்கி நகர்ந்தது. 1968 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் பெண் ஆசிரியையான "சுஹாதா "என்பவரின் நியமனத்துடன் மாணவர்களிடையே இலைமறை காயாய் மறைந்து கிடந்த கலை ஆற்றல்களும் வெளிக்கொணரும் வகையில் தையற் கலை அறிமுகமாகியது. இவ்வாறு படிப்படியாக வளர்ச்சியை எட்டிய எம் அறிவகத்தில் 1972 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர கலை பிரிவு ஆரம்பிக்கப்பட்டதோடு, முதல் பட்டதாரி?யாக S.M. நிஜாம்  என்னும் மாணவனுக்கு பல்கலைக்கழக அனுமதியும் கிடைக்கப்பெற்றது. அத்தோடு 1983 ஆம் ஆண்டு எம் கல்லூரி " மகா வித்தியாலயம்" எனும் உயர் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டது. அத்துடன் 1983 ஆம் ஆண்டு க.பொ.த . உயர்தர வணிக பிரிவின் ஆரம்பத்தோடு பல துறை சார்ந்த கல்விமான்களை உருவாக்கும் முயற்சியில் எம் அறிவகம் பயணிக்க தொடங்கியது. 1997 ஆம் ஆண்டு எம் கல்லூரி "மத்திய மகா வித்தியாலயமாக " தரம் உயர்த்தப்பட்டு, வரலாற்றேயே தன் பக்கம் திசை திருப்பியது. மேலும் 2001 ஆம் ஆண்டு வாசிகசாலை திறந்து வைக்கப்பட்டதோடு மாணவர்களிடையே வாசிப்புத் திறன் விருத்தி அடைந்ததுடன் நல்ல மனோபாவங்களும் வளர வாய்ப்புக்களுக்கான கதவுகள் மெல்ல திறக்கப்பட்டது . இவ்வாறு கல்வி மற்றும் ஏனைய இணைப்பாடவிதான செயல்பாடுகளிலும் மாணவர்களது ஆற்றல்கள் வெளிக்கொணரப்பட்ன. மேலும் 2016 ஆம் ஆண்டு தொழில்நுட்பக் கட்டிடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 2018 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.  எமது கலையகத்தின் 2018.06. 26 ஆம் திகதி  அன்று தலைமைப் பொறுப்பை ஏற்ற எமது கௌரவத்துக்குரிய அதிபர் A.S.M
இராஷாட்  தலைமையிலான எம் பாடசாலை நிர்வாகம் மிகச் சிறப்பான முறையில் திறம்பட இயங்கி வருகின்றது என்பது வெள்ளிடை மலை .
அத்தோடு குருணாகல மாவட்டத்திலே தனித்துவம் மிக்க கல்லூரியாக விளங்கும் எம் கல்லூரி,  கல்வி அடைவிற்கு முக்கியத்துவம் அளித்து வரும் அதே வேலை சமூகத்திற்கு பல துறைகளிலும் ஆற்றல் உள்ள மனித வளங்களை உருவாக்குவதிலும் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
 மேலும் எம் கல்லூரியில் "விசேட தேவையுடைய மாணவர் பிரிவு " 2017.08. 26 ஆம் திகதி அன்று உருவாக்கப்பட்டதோடு இன்று அப்பிரிவு உயிர்த்துடிப்புடன் செயற்பட்டு வருகின்றமை முக்கியமான விடயமாகும் .
மேலும் 2020.06. 29 ஆம் திகதி கணித விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டதோடு, எம் கல்விப் பயணத்தின் புதியதொரு  அத்தியாயம் மீண்டும் புறப்பட்டது,  அத்தோடு 1AB பாடசாலையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 15 மாணவர்கள் சித்தி அடைந்ததோடு "M.A.  மித்ஹான் " என்ற மாணவன் 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்தவை  ஊரிற்கும் எம் கலையகத்திற்கும் பெருமிதமளிக்கும் வெற்றியாகும்.
 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரண தரபா பரீட்சையில் எட்டு மாணவர்கள் "9A " திறமை சித்திகளை பெற்றதோடு மூன்று மாணவர்கள் 8 AB சித்திகளை தனதாக்கிக் கொண்டனர்.  2021.06.08ம் திகதி எம் கல்லூரித் தாய் பெருமிதம் கொண்ட மாபெரும் நன்னாளாகும்.  எம் கலையகம் "தேசிய பாடசாலை" எனும் அந்தஸ்தைப் பெற்ற இத்தருணம் வரலாற்றில் வீரிய எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்வாகும்........