மஜ்லிஸ் நிகழ்வு
தரம் 10 பெண் மாணவிகளுக்கான மஜ்லிஸ் செயற்திட்டத்தின் முதல் அமர்வு 2025.09. 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6:30 தொடக்கம் 7:20 வரை விவசாய பிரிவு அறையில் நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வில் பிரதான வளவாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் அஷ்ஷேய்க் ஏ.சி ஷாஜகான் (நளீமி) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
நன்றியும் மரியாதையும் நிறைந்த நாள்!
எமது மாணவர்களின் கல்விப் பயணத்தை ஒளிமயமாக்கி வழிநடாத்தும் அன்பு ஆசிரியர்களை கௌரவிக்கும் நோக்கில், இன்றைய ஆசிரியர் தின நிகழ்வு எமது பாடசாலையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இன்றைய அனைத்து பாடசாலை நிகழ்வுகளும் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. Band வாத்தியத்தின் இசையுடன் ஆசிரியர்கள் வரவேற்கப்பட்டனர்.மாணவர்கள் ஆசிரியர்களுக்கு Badge அணிவித்து, அன்பும் நன்றியும் வெளிப்படுத்தினர். மாணவர்கள் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளை அரங்கேற்றியது மாத்திரமன்றி சுவாரஸ்யமான மைதான நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தனர். அதேபோல் ஆசிரியர்களினாலும் சிறந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. மேலும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களினால், ஆசிரியர்களுக்காக அன்புடன் பகல் போஷணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்றைய நிகழ்வை வெற்றிகரமாக நடத்த பங்களித்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்.
"உலகை வழிநடாத்த – அன்பால் போஷியுங்கள்"
என்பதனை முன்னெடுத்து, எமது பாடசாலையில் சிறுவர் தினம் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடன், மாணவர்களின் பங்குபற்றுதலோடு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஆங்கில முகாம்
தரம் 5 - 2025
வலயக்கல்வி அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில முகாம் அந்நூர் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இது 2025 செப்டம்பர் 24 ஆம் திகதி புதன்கிழமை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த ஆங்கில முகாமை ஒரு மகத்தான வெற்றியாக மாற்றிய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவர்களின் உற்சாகமான பங்கேற்பு இந்த முகாமை அர்த்தமுள்ளதாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றியது.